search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவர் இடிந்து விபத்து"

    உ.பி. மாநிலம் நொய்டா மாவட்டத்தில் இன்று பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. #SchoolWallCollapse #NoidaSchool
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டா மாவட்டத்தில் உள்ள சாலாப்பூர் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை பள்ளியின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SchoolWallCollapse #NoidaSchool
    கடலூர் மத்திய சிறையில் சுவர் இடிந்து விழுந்ததில் கைதியின் கால் முறிந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரையை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர் விசாரணை கைதியாக இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    அதேபோல் சென்னையை சேர்ந்த ரூபன் என்பவர் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். ரூபனும், சுரேசும் அடுத்தடுத்த அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை சுரேஷ் அங்குள்ள தடுப்புச்சுவரை பிடித்துக் கொண்டு அடுத்த அறையில் உள்ள ரூபனிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் சுரேசுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அவர் கூச்சலிட்டார்.

    உடனே சிறை காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். சுரேசை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #Pakistan #WallCollapse
    கராச்சி:

    பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் உள்ளது குலாம் சர்வார் ஷம்பானி கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.



    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    மேலும், 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 குழந்தைகள் பலியானது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #WallCollapse
    பட்டிவீரன் பட்டியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் பட்டிவீரன்பட்டியில் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதில் மராமத்து பணிகள் மேற்கொண்டு வந்தார்.

    இன்று அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 7 கட்டிட தொழிலாளர்கள் 3-வது மாடியில் இருந்து சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது தளத்தில் 3 தொழிலாளர்கள் இருந்தனர். பழமையான சுவர் என்பதால் 3-வது மாடியில் தரை பகுதி இடிந்து திடீரென கீழே விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சாரதா, ராஜவேலு, நாட்ராயன் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

    படுகாயமடைந்த சாரதா தேனி அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பஞ்சாப்பில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். #WallaCollapse
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் லக்கன்பூர் கிராமத்தில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. இன்று காலை 15க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென கட்டப்பட்ட சுவர் சரிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர்.

    இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் பலியான் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கருப்பூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மதன் குமார் பரிதாபமாக இறந்தான். #WallCollapse
    கருப்பூர்:

    கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் மதன்குமார் (வயது 13). இவன் அங்கு உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் குடித்தெரு பகுதியில் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான்.

    அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டின் சுற்று சுவர் திடீரென்று இடிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கிய அவன் உயிருக்கு போராடினான். இதை பார்த்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு கருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற சிறுவனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மதன்குமார் பரிதாபமாக இறந்தான். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். #Arunachalpradesh #WallCollapse
    இடாநகர்:

    அருணாசலப்பிரதேசம் மாநிலம் பாபும்பரே மாவட்டத்தில் உள்ள டோனில் காலனி பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை அங்கு கட்டுமான வேலையில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

    கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறந்தவர்கள் உடல்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Arunachalpradesh #WallCollapse
    ×